தமிழ்நாடு சோப் அசோசியேஷன்
1964 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட கைத்தொழில் சோப் உற்பத்தியாளர் சங்கமாக சில உறுப்பினர்களோடு துவங்கப்பட்ட சங்கம் மென்மேலும் மலர்ந்து இன்று 350 உறுப்பினர்களைக் கொண்டு 60ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.
அதன்
பின்னர் திரு எம் எ புருஷோத்தமன் அவர்கள் தலைமை தாங்கி சங்கத்தின்
உறுப்பினர்களை வழிநடத்தி சென்றார்கள்.
அதன் பின்னர் மதுரையில் உள்ள திரு வி எஸ் செல்வம் அவர்கள் தலைமையேற்று இருந்தபோது திரு.எ
கிருஷ்ணா அவர்கள் செயலாளராக பதவி வகித்தார்கள்.
1985 86 ஆம் ஆண்டு சீனிவாசன் அவர்கள் தலைவராக பொறுப்பேற்றார்கள்.
சங்கம் தொடங்கி காலத்தில் இருந்தே அதாவது 1964 ஆம் ஆண்டு முதல் 1986 ஆம் ஆண்டு வரை திரு யு எ
கிருஷ்ணா அவர்கள் சங்கத்தின் செயலாளராக இருந்து சங்கத்தை நல்ல முறையில் வழிநடத்தி சென்றார்கள்
அவர் ஆற்றிய செயல்கள் அனைத்தும் சங்கத்தின் வளர்ச்சிக்கும் பெரும் உறுதுணையாக இருந்தது.
அதன் பின்னர் திரு கே வி கணேசன் அவர்கள் சங்கத்திற்கு அடுத்த செயலாளராக பதவி வகித்தார்கள்.
திரு ஜெயராஜ் அவர்கள் தலைவராக தொடர்ந்து ஆறு ஆண்டுகள் தொடர்ந்து இருந்தார்கள்.
பின்னர் தலைமை பொறுப்பேற்ற மதுரை திரு சுந்தரம் அவர்கள் சங்கத்தின் முன்னேற்றத்திற்கு பெரும்
பங்காற்றினார்கள்.
அதற்கு அடுத்த தலைவராக பதவி வைத்த திரு ஜாபர் அவர்களும் சங்கத்தின் வளர்ச்சிக்கு பெரும்
பங்காற்றினார்கள்.
பின்னர் பொள்ளாச்சி திரு எஸ் கண்ணன் அவர்கள் சங்கத்தின் வளர்ச்சிக்கும் சங்க உறுப்பினர்கள்
ஒற்றுமைக்கும் ஆற்றிய பணிகள் மிகவும் சிறப்பானது.
பொள்ளாச்சி திரு எஸ் கண்ணன் அவர்கள் தலைவராக இருக்கும் பொழுது நம்மளுடைய மூலப் பொருளான சோடா ஆஸ் மிகவும் பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டது அப்பொழுது திரு கண்ணன் அவர்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.